உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்து சென்றவர். இவர் ஒரு படம் சீர்யஸாக நடித்தால் 2 காமெடி படங்களை கொடுத்துவிடுவார்.

அப்படித்தான் தூங்காவனம் முடிந்த கையோடு அடுத்து சபாஷ்நாயுடு என்ற காமெடி படத்தை தொடங்கினார்.

இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சரண் இயக்கத்தில் கமல்-அஜித் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது.

இதுக்குறித்து சரணே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார், ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படம் பேச்சு வார்த்தையிலேயே ட்ராப் ஆனது.

வேறு என்ன இரண்டு பேரின் சம்பளம் மட்டுமே கிட்டத்தட்ட 70 முதல் 80 கோடியை தாண்டும். இதனால், தயாரிப்பாளர்கள் ஜூட் விட்டிருப்பார்கள். மேலும், முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிக்காமல் இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here