அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். விவேகம் படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் நான் சினிமாவில் 2 அல்லது 3 படங்களில் நடித்தால் போதும் என தான் நினைத்தேன். ஆனால் 50 படங்களில் நடிப்பேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை.

உழைப்பு தான் இதற்கு காரணம். தொடர்ந்து உழைத்தால் வெற்றி பெறலாம். எனக்கு பிடித்த கதாநாயகன் மகேஷ் பாபு. அவரின் அழகுக்கு நான் தீவிர ரசிகை. கிசுகிசுக்களை பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் வாழ்க்கையில் சிறந்த மனிதர் இவர் தான் என யாரை நினைக்கிறேனோ அவரை காதலித்து திருமணம் செய்துகொள்வேன். அழகு இல்லாவிட்டாலும் 6 அடி உயரம் இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here