ப்போதைக்கு தென் இந்திய நடிகைகளில் கம்பீரமான அரசி தோற்றத்துக்கு பொருத்தமானவர் அனுஷ்காதான். அருந்ததியில் இருந்து பாகுபலி வரை அதனை நிரூபித்துவிட்டார்.

தொடர்ந்து சரித்திரப் படங்களில் நடித்து வந்தவர், இன்னொரு பிரம்மாண்ட படத்தில் லீட் ரோலில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக செய்தி வருகிறது.சங்கமித்ரா படத்தில் ஸ்ருதி விலகியதை தொடர்ந்து அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

அனுஷ்கா கையில் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது. ஆனாலும் கூட கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டாராம்.படங்கள் எதுவும் இல்லாத நிலையில் இப்படி ஒரு பெரிய படத்தை ஏன் இழக்கிறார் என்பதற்கு காரணம் கண்டுபிடித்துவிட்டன டோலிவுட் மீடியாக்கள்.

அனுஷ்கா திருமணத்துக்கு தயாராகி வருகிறார். அதனால்தான் மேற்கொண்டு படங்களை ஒப்புக்கொள்வதில்லை என்று எழுதுகின்றன.ஆனால் அனுஷ்காவைக் கேட்டால், திருமணம்னா சொல்ல மாட்டேனா… எனக்கு வசதியான படங்கள் அமைந்தால் ஒப்புக் கொள்வேன் என்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here