பிரம்மாண்டமான காட்சிகள், சிறப்பாக நடிப்பு, வலுவான காட்சியமைப்பு ஆகிய காரணங்களினால் எதிர்பார்த்ததைப் போலவே பாகுபலி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்தியாவில் உள்ள 95 சதவீத தியேட்டர்களில் பாகுபலி-2 திரைப்படம் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகுபலி 2 வெளியாகியுள்ள சில திரையரங்குகளில் கூடுதலாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பாகுபலி 2 திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ரிலீசான முதல் நாள் மட்டும் 3 மில்லியன் டாலருக்கும் அதிகமாக பாகுபலி 2 வசூலித்துள்ளதாக அந்த படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தரான கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது அமெரிக்காவில் வெளியாகி, அதிக வசூலை குறித்த முதல் இந்திய திரைப்படமாகும். சல்மான்கான் நடிப்பில் வெளியான “சுல்தான்” மற்றும் அமிர்கான் நடிப்பில் வெளியான “தங்கல்” ஆகிய படங்கள் வெளிநாட்டு வசூலில் படைத்துள்ள சாதனைகளை ”பாகுபலி 2” முறியடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here