கடுகு படத்தில் நடித்த சுபிக்ஷா தற்போது ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்து வரும் வேட்டை நாய் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரிய குளம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இப்படத்தில் நாயகியாக நடிக்கும் சுபிக்ஷா, ஆர்.கே.சுரேஷின் நடிப்பைப்பார்த்து தான் மிரண்டு விட்டதாக சொல்கிறார்.

இதுகுறித்து சுபிக்ஷா கூறுகையில், இந்த வேட்டை நாய் படத்தில் நான் ஒரு அப்பாவி பெண்ணாக நடிக்கிறேன். திருமணமாகி புகுந்து வீட்டிற்கு சென்ற பிறகு நான் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த படம். இதில் ஆரம்பத்தில் பாவாடை தாவணி திருமணத்திற்கு பிறகு புடவை என குடும்பப் பாங்கான நாயகியாக நடிக்கிறேன்.

மேலும், இந்த படத்தில் நான் கமிட்டான பிறகுதான் பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்த தாரைத்தப்பட்டை படத்தைப் பார்த்தேன். அவரது அதிரடியான நடிப்பைப்பார்த்து மிரண்டு விட்டேன். அதையடுத்து அவருடன் எப்படி ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்கிற பயம் எனது மனதளவில் எழுந்தது. அதனால் திக் திக் மனநிலையுடன்தான் படப்பிடிப்பு தளத்துக்கே சென்றேன்.

ஆனால், நிஜத்தில் ஆர்.கே.சுரேஷ் ரொம்ப மென்மையானவராக இருந்தார். அன்பாக பேசினார். அதனால் அவரைப்பற்றி எனக்குள் இருந்த பயம் முழுமையாக நீங்கியது. இப்போது இயல்பாக நடித்துக்கொண்டிருக்கிறேன் என்று பெரியகுளம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தெரிவித்தார் சுபிக்ஷா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here