ரஜினியின் பிரம்மாண்டமான 2.ஓ படம் ரிலீஸாக இருந்த தீபாவளி நாளைப் பிடிக்க படக் குழுவை விரட்டி வருகிறாராம் விஜய்.

ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2.ஓ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் இன்னும் பட வேலைகள் பாக்கி இருப்பதால் ஜனவரிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். எனவே அந்த தீபாவளி நாளில் தனது படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் விஜய்.

அட்லீ இயக்கத்தில் மூன்று வேடங்களில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பை துரிதப்படுத்தி வருகிறாராம் விஜய், அது மட்டுமில்லாமல் எப்படியாவது படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று அட்லியிடம் ஆர்டர் போட்டுள்ளாராம் விஜய்.சமீப ஆண்டுகளில் விஜய்க்கு தீபாவளிக்கு ரிலீஸான படங்கள் எல்லாமே ஹிட் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுவும் விஜய்-ன் இந்த அதிரடி ஆர்டருக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

மேலும், அக்டோபர் மாதம்  13-ம் தேதி திரைப்படம் வெளியாகும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here