கபாலி ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நந்திதா. முதல் படமே ஹிட்டடித்ததால் அடுத்தடுத்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல படங்களில் நடித்து பிர பலமாகி விட்டார். கவர்ச்சி விசயத்தில் தொடர்ந்து கோடு போட்டு நடித்து வரும் நந்திதா, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் அந்த செக்போஸ்ட்டை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், வருகிற 12-ந்தேதி தனது முதல் படநாயகனான அட்டகத்தி தினேசுடன் நந்திதா நடித்துள்ள உள்குத்து படம் திரைக்கு வருகிறது. இந்தநிலையில், தற்போது அவர் செல்வா இயக்கத்தில் வணங்காமுடி படத்தில் நடித் துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய போலீஸ் அதிகாரியாக சிம்ரன் நடிக்க அவருடன் வரும் இன்னொரு முக்கிய போலீசாக நந்திதா நடித்து வருகிறார்.

இந்த வேடத்தில் நடித்த அனுபவம் குறித்து நந்திதா கூறுகையில், போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னபோது, எனக்கு பயமாக இருந்தது. நமக்கு அந்த வேடம் செட்டாகுமா என்று தயங்கினேன். ஆனால் டைரக்டர் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். பிறகு, ஒப்புக்கொண்டேன். காக்கி சட்டையை அணிந்து நின்றபோது எனது பயம் காணாமல் போனது. தைரியம் தானாக வந்தது. என்னையுமறியாமல் கம்பீரமாக நின்றேன். காக்கி சட்டைக்கு உள்ள பவர் அப்போதுதான் எனக்கு தெரிந்தது என்கிறார் நந்திதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here