தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் என்றாலே, தற்போது நம் நினைவுக்கு வருவது கானா பாலாதான். அட்டக்கத்தி மூலம் மக்களிடையே பிரபலமான கானாபாலா, சூதுகவ்வும், என்னை அறிந்தால், மெட்ராஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, சிலப்படங்களில் நடித்தபடியே பாடியுள்ளார். முக்கியமாக, சூதுகவ்வும் படத்தில் வந்த, ‘காசுப் பணம் துட்டு’ பாட்டு இவரை வேற லெவலுக்கு அழைத்துச் சென்றது.

ஒரு கட்டத்தல், கானா பாலா இருந்தாலே  படம் ஹிட்தான் என்று அவரது பாடலை இடம்பெற வைத்து வந்தனர். கடந்த ஆண்டு வெளியான கபாலி படத்திலும், கானா பாலா பாடி இருந்தார். ஆனால், அதற்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்பு ஏதும் இல்லை. அவரது மார்க்கெட்டும் சரிய ஆரம்பித்தது.

இந்நிலையில், சினிமாவில் இன்னும் ஓராண்டுதான் பாட்டு பாடுவேன் என்று கானா பாலா அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கானா பாலா தெரிவித்துள்ளார். கானா பாலாவின் இந்த முடிவால், சினிமாத் துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here