இளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் பைரவா.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது, இந்நிலையில் இப்படத்தின் 100வது நாள் வெகுவிரைவில் வரும் நிலையில், அதற்குள் தொலைக்காட்சியில் இந்த படத்தை ஒளிப்பரப்பவுள்ளனர்.

இவை விஜய் ரசிகர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு முன் சூர்யாவின் அஞ்சான் படம் இதேபோல் படம் வெளிவந்த சில நாட்களில் ஒளிப்பரப்பப்படவிருந்தது.

ஆனால், சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இப்படத்தை இத்தனை சீக்கிரம் ஒளிப்பரப்பக்கூடாது என கடுமையாக கூற, பின் அந்த ஒளிப்பரப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது அதேபோல் ஒரு சில விஜய் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் காட்டி வருகின்றனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here