`சரவணன் இருக்க பயமேன்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது, `பெதுவாக என் மனசு தங்கம்’, `இப்படை வெல்லும்’ ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக தேசிய விருது இயக்குநர் பிரியதர்ஷனுடன் இணையவிருப்பதாக நேற்று முன்தினம் உதயநிதி அவரது டுவிட்டர் பக்கத்தில தெரிவித்திருந்தார்.

மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கும் இப்படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாஷில் நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `மகேஷின்ட பிரதிகாரம்’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் உதயநிதி ஜோடியாக மலையாளத்தின் முன்னணி நடிகையாக வலம் வரும் நமீதா பிரமோத்திடம் படக்குழு பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே `என் காதல் புதிது’ என்ற தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நமீதா பிரமோத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here