மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’. இதுபற்றி கூறிய மிஷ்கின்….

“ இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் மிகபெரிய அளவில் பேசப்படும். ஒரு நாள் நானும் தம்பி விஷாலும் பேசிக்கொண்டிருந்த போது தம்பி விஷால் என்னிடம் துப்பறிவாளன் திரைப்படத்தை பொறுத்தவரை இசை வெளியீட்டு விழாவுக்கு பதிலாக ‘ஆக்‌ஷன் வெளியீட்டு விழா’ ஒன்றை ஏற்பாடு செய்வோம் என்று வித்தியாசமான ஒரு ஐடியாவை கூறி அசரவைத்தார். அந்த அளவுக்கு இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

விஷாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். விஷால் என்னுடைய மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவர்.அவர் என்னுடைய அன்பான தம்பி. நான் இதுவரை பணியாற்றிய கதாநாயகர்களில் விஷாலை போன்று எனக்கு மிகவும் நெருக்கமானவர் யாருமில்லை. நான் அவருடைய கருத்துக்களை ஏற்றுகொள்வேன். அவரும் என்னுடைய கருத்துக்களை ஏற்றுகொள்வார். என்னுடைய படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரம் வந்தாலும் அது நிச்சயம் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும்.

பாக்யராஜ் தொடங்கி இதில் பலர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நிச்சயம் அனைத்து கதாபாத்திரமும் கவனிக்க வைக்கும் கதாபாத்திரமாக இருக்கும். நான் அதிமாக புதியவர்களை வைத்து படம் இயக்க கூடிய ஒரு இயக்குனர்.

விஷாலை போன்ற பெரிய நடிகர் நடிப்பது இந்த படத்துக்கு மிகப்பெரிய பலத்தை தந்துள்ளது. நான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் கூட புதிய நாயகன், புதிய நாயகி தான் நடிக்கிறார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here