அறுவை சிகிச்சை செய்து உதட்டை அழகுபடுத்தியது குறித்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பேட்டி அளித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி இந்தி படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. அவர் கையில் சபாஷ் நாயுடு படம் மட்டுமே உள்ளது. சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிவிட்டார்.

பெஹன் ஹோகி தேரி படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.ஸ்ருதி ஹாஸன் அறுவை சிகிச்சை செய்து உதட்டை அழகுபடுத்தியதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ருதியின் சமீபத்திய புகைப்படத்துடன் கலாய்க்கிறார்கள்.

உதட்டை அழகுபடுத்தியதை ஒப்புக் கொள்ளவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை ஸ்ருதி. இது குறித்து ஸ்ருதி கூறும்போது, என் உடம்பு, என் முகம் என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்றார்.சமூக வலைதளங்களில் யார் என்னை பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி.

ஸ்ருதி ஹாஸன் வெயிட் போட்டுவிட்டதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்தார்கள். அவர் பெஹன் ஹோகி தேரி படத்திற்காக வெயிட் போட்டாராம். ஒரு நடிகை எப்பொழுதுமே ஒல்லியாகவே இருக்க முடியாது. நாங்களும் மனிதர்கள் தான். படத்திற்காக வெயிட் போடுவோம், குறைப்போம். சில சமயம் அது இயற்கையாகவே நடக்கும் என ஸ்ருதி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here