ஓம் பெரியாண்டவர் மூவிஸ் சார்பில் பி.டி. குப்புசாமி தயாரிக்கும் படம் ‘குழலி’.

இதில் ‘காக்காமுட்டை’ விக்னேஷ், ‘பாபநாசம்’ எஸ்தர் நாயகன் – நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தீனா, ரசாத், ஜானகி, இயக்குனர் மூர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – பாண்டியன், இசை – ஜோகன், பாடல்கள் – கபிலன், எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ், நடனம் – சங்கர், இணை தயாரிப்பு – துரை பாண்டியன், தயாரிப்பு – பி.டி.குப்புசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செரா.கலையரசன்.

“எல்லா பெற்றோர்களுக்கும், தம் பிள்ளைகள் நன்றாக வர வேண்டும் என்ற ஆசை உண்டு. பிள்ளைகளின் பருவங்கள் மாறுபடும் பொழுது பெற்றோர்களுக்கு எதிராக மனநிலை மாறுகிறது. பிள்ளைகளின் மனநிலையை பெற்றோர்கள் ஏற்றார்களா? என்ற யதார்த்தமான பதிவை ஏற்படுத்துவதே ‘குழலி’.

16 வயதில் நடக்கும் சம்பவங்களே 90 வயது வரை மறக்க முடியாத பதிவாக இது இருக்கும்” என்றார்.

கம்பம், குமுளி, சுருளிப்பட்டி, மூணாறு போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here