காதல் வானில் சிறகடித்து பறக்கும் நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி கொடுக்கும் குடைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தமிழ் சினிமா இயக்குனர்கள் புலம்பி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது ஜெய்க்கும், ஆந்திராவை சேர்ந்த நடிகை அஞ்சலிக்கும் காதல் பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

தொடக்கத்தில் மறுத்தாலும், சமீப காலமாக அவர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் அதை உறுதிபடுத்தி வருகிறது.

டிவிட்டரிலேயே ஒருவரையொருவர் கொஞ்சிக் கொள்ளும் அவர்கள், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் எல்லை மீறுகிறார்களாம். இடைவெளியின் போது கேரவனுக்குள் செல்லும் அவர்கள், சிறிது நேரம் கழித்து மேக்கப் கலைந்து வெளியே வருகிறார்களாம்.

இதனால், அவர்களுக்கு மீண்டும் மேக்கப் போட 1 மணி நேரம் ஆகிறதாம். ஆனால், இதுபற்றி தயாரிப்பாளரிடம் கூறமுடியாமல் தவிக்கிறாராம் இயக்குனர். இவர்களின் காதல் கொண்டாட்டத்தை அரங்கேற்ற படப்பிடிப்பு தளம்தான் கிடைத்ததா? என்று பொருமுகிறார்கள் படகுழுவினர்.

இவர்கள் அடிக்கும் லூட்டி காரணமாக, இனி இவர்களை வைத்து படம் எடுக்கக்கூடாது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறதாம்.

ஏற்கனவே, பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் பந்தா காட்டும் நடிகர் ஜெய், நடிகை அஞ்சலியுடனான காதல் விவகாரத்திலும் கெட்ட பெயர் வாங்கி வருவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here