ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் படம் சங்கமித்ரா. சரித்திர கதையில் தயாராகும் இந்த படத்தில் ஜெயம்ரவி-ஆர்யா நாயகர்களாக நடிக்க ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா என்ற டைட்டீல் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு தன்னிடம் முழுக்கதையையும் சொல்லவில்லை. சரியான படப்பிடிப்பு தேதியை சொல்லவில்லை என்று சில குற்றச்சாட்டுகளை வைத்து விட்டு அந்த படத்தில் இருந்து தான் வெளியேறுவதாக சொன்னார் ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில், தற்போது அந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்கப்போகும் நடிகை யார் என்கிற அடுத்தக்கட்ட கேள்விகள் எழுந்துள்ளன. அனுஷ்கா, நயன்தாரா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் கோலிவுட்டில் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஹன்சிகா நடிக்கயிருப்பதாக இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், கோலிவுட்டில் என்ட்ரியானபோது சின்ன குஷ்பு என்று அழைக்கப்பட்ட ஹன்சிகா, சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை, அரண்மனை-2, ஆம்பள ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதனால் சங்கமித்ராவில் ஹன்சிகா நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here