ரஜினிகாந்த் எனக்கு கடன்பட்டுள்ளார் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.இசைஞானி இளையராஜா கடந்த வாரம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இசைஞானியை வாழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கூறியதாவது,என் பிறந்தநாள் அன்று ரஜினிகாந்த் மும்பையில் இருந்தார்.

காலையிலேயே போன் செய்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார். 74 வயதை தொடுவது பெரிய விஷயம் என்று கூறி வாழ்த்தினார்.நீங்கள் எனக்கு ஒரு டீ வாங்கிக் கொடுக்க வேண்டிய பாக்கி உள்ளது. எப்பொழுது வாங்கித் தருவீர்கள் என்று நான் கேட்டதும் ரஜினி விழுந்து விழுந்து பத்து நிமிடம் சிரித்தார்.

நான் மும்பையில் இருந்து சென்னை திரும்பி வந்தவுடன் கண்டிப்பாக டீ வாங்கிக் கொடுக்கிறேன் என்று ரஜினிகாந்த் எனக்கு வாக்குறுதி அளித்தார்.எனக்கு பிறந்தநாள் விழா என்றதும் நான் நேரில் வந்து ராஜா சாரை வாழ்த்துவேன் என்று கமல் ஹாஸன் தானாக வந்து வாழ்த்தினார் என இளையராஜா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here