நடிகர் ஜெய் தற்போது நடிகை அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் உடன் பலூன் திரைப்பட படப்பிடிப்பில் கொடைக்கானலில் இருக்கிறார். நேற்று அவரது பிறந்த நாள் என்பதை அறிந்த பலூன் படக்குழுவினர் அவருக்கு தெரியாமல் கேக் வாங்கி, ஜெயக்கு சர்ப்ரைஸ் கொடுத்து பிறந்த நாள் கொண்டாடினர். அதுவும் ஹெலி கேம் மூலமாக கேக்கை ஜெய்க்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியில் ஜெய் நடித்துக்கொண்டிருந்த போது, ஹெலி கேம் மூலமாக கேக் ஜெய்யிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. இது குறித்து அறிந்திராத ஜெய் மிகவும் ஆச்சர்யமடைந்துள்ளார். தனது மகிழச்சியை கட்டுப்படுத்த முடியாத ஜெய், பின்னர் தன் படக்குழுவினருடன் கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here