பாகுபலி 2 இசை வெளியீட்டு விழாவுக்கு அழகுப் பதுமையாக வந்திருந்தார் அனுஷ்கா.

பூசினாற் போன்ற உடல்வாகு கொண்டவர் அனுஷ்கா. இந்நிலையில் அவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக நல்லா சாப்பிட்டு வெயிட் போட்டார். படம் முடிந்த பிறகு வெயிட்டை குறைக்க முயன்றும் பலனில்லை.

இதையடுத்து அனுஷ்கா குண்டாத்தியாகிவிட்டார் என்று ஆளாளுக்கு பேசினார்கள். சிங்கம் 3 படத்தில் அனுஷ்கா ஹீரோ சூர்யாவுக்கு மனைவி போன்று அல்ல ஆன்ட்டி போன்று தெரிந்தார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

அனுஷ்கா குண்டானதால் பாகுபலி 2 படப்பிடிப்பு கூட பாதிக்கப்பட்டது. மேலும் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்தி அவரை ஸ்லிம்மாக்கியுள்ளார் ராஜமவுலி என்றார்கள். பாகுபலி 2 இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு வந்த அனுஷ்கா சிங்கம் 3 படத்தில் இருந்தது போன்று குண்டாக இல்லை. மேலும் இளமையாகத் தெரிந்தார்.

தன்னை விட வயதில் சின்னவரான தமன்னாவை விட அனுஷ்கா தான் இளமையாகவும், அழகாகவும் தெரிந்தார். இதன் மூலம் தன்னை பற்றிய கிண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அனுஷ்கா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here