‘ஓவியா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க வருகின்றார் இலங்கை நடிகை மிதுனா.

இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கும் புதிய படமே ‘ஓவியா’.

தன்னை முறையாக பராமரிக்காமல் தனது சாவுக்கு காரணமான பெற்றோர்களை பழிவாங்கும் குழந்தையின் வாழ்க்கையின் படம் தான் ஒவியா.

இந்த படத்தின் நாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா முதன் முறையாக தமிழில் அறிமுகமாகின்றார்.

ஏற்கனவே இலங்கையில் இருந்து நடிகை பூஜா தமிழில் அறிமுகமாகி பாலாவின் நான் கடவுள் மூலம் பிரபலமடைந்திருந்தார்.

அந்த வரிசையில் தமிழில் இலங்கையிலிருந்து மிதுனா அறிமுகமாகின்றார்.

குறித்த படத்திற்கு யதார்த்தமான தோற்றத்துடன் கூடியவர்களே நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here