இந்தப் படத்தில், குங்ஃபூ மாஸ்டராக நடிக்கும் பிரபுதேவாவுக்கு ஜோடியாக, லட்சுமி மேனன் நடிக்கிறார். இதில், லட்சுமி மேனன் பரத நாட்டிய மாணவியாம். இந்தப் படத்தில் வில்லனாக, ‘பாகுபலி’ படத்தில் நடித்திருந்த காளக்கேயர்களின் தலைவன் பிரபாகரன் நடிக்கிறார் என்ற தகவல் பரவ, படத்தின் அப்டேட்ஸைத் தெரிந்துகொள்ள இயக்குநர் அர்ஜுனைத் தொடர்புகொண்டோம்.

நான் சின்னப் பையனாக இருந்தப்போ, எங்க  ஊர் தியேட்டர்ல சனி, ஞாயிறுகளில் புரூஸ் லீ படங்கள்தான் போடுவாங்க. அந்தப் படங்களை எல்லாம் பார்த்து வளர்ந்ததனாலதான், ‘யங் மங் சங்’ படத்தில் குங்ஃபூ மாஸ்டர் கேரக்டரை கதாநாயகனுக்கு வெச்சேன். ‘பாகுபலி’ படத்துல காளக்கேயனா நடிச்சிருந்த பிரபாகரன்தான், இந்தப் படத்தில் வில்லனா நடிக்கிறார். பிரபுதேவா குங்ஃபூ மாஸ்டர்னா, பிரபாகரனுக்கு ஃபைட்டர் கதாபாத்திரம். ஒரு சீரியஸான வில்லன் கேரக்டரில் அவரைப் பார்க்கலாம்’’ என்று தகவலை உறுதிபடுத்தினார் அர்ஜுன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here