சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும்  படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பட்டு வெளியிடப்பட்டு பட்டி தொட்டி எல்லாம் பெரும் வரவேற்பு  பெற்றது .இந்நிலையில் இந்தப்  பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here