நடிகை த்ரிஷா தற்போது ஹீரோக்களுடன் நடிக்கமாட்டேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து, அதுபோன்ற கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடித்த ஒரு படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தபோதும் தொடர்ந்து தனது முடிவில் விடாபிடியாகவே இருக்கிறாராம் அந்த நடிகை.

இந்த நடிகைக்கு தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நல்ல மார்க்கெட் உள்ளதால் அங்கேயும் நடிகையின் இந்த கொள்கை பரவ, தினமும் மூன்று மொழிகளிலும் சேர்த்து குறைந்தது 10 தயாரிப்பாளர்களாவது நடிகையிடம் போன் போட்டு என்னிடம் நீங்கள் நினைக்கிற மாதிரி ஒரு கதை இருக்கிறது, கேளுங்கள் என்று நச்சரித்து வருகிறார்களாம்.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் நடிகையும் ரொம்பவுமே திணறி வருகிறாராம். இருப்பினும், போன் பண்ணும் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு பதிலை சொல்லி கட் பண்ணி விடுகிறாராம் நடிகை. தயாரிப்பாளர்களின் நச்சரிப்பு தொடர்ந்துகொண்டே இருப்பதால், இனிமேல், கதை கேட்பதற்கு தனியாக ஒருவரை நியமிக்க நடிகை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here