பாவனா கடத்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் நடிகர் திலீப்புக்கு மறைந்த நடிகர் கலாபவன் மணி மரணத்தில் முக்கிய பங்குள்ளதாக இயக்குனர் பைஜு வெளியிட்டுள்ள அறிக்கையால் கேரள திரையுலகம் ஆட்டம் கண்டுள்ளது.

கலாபவன் மணியின் மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது தம்பி ராமகிருஷ்ணன் சி.பி.ஐ அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பைஜூ இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நடிகர் கலாபவன் மணியின் சாவுக்கு திலீப்தான் காரணம் எனவும் அதற்கு உரிய ஆவணங்கள் தன்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கொச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டாரகரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குனர் பைஜூவும் இன்று புகார் அளிக்க உள்ளார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாவனா கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை 2 நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

இந்நிலையில், கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here