திருமணம், குழந்தைக்கு பிறகு நடிகை சரண்யா மோகன் குண்டாகிவிட்டார் என ரசிகர்கள் பலரும் கலாய்த்து வந்தனர். இதற்கு சரண்யா மோகன் அண்மையில் கிண்டலடித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகை நளினி, தொகுப்பாளினி அர்ச்சனா, நடன ஆசிரியல் கலா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

நளினி கூறுகையில், பெண்களுக்கு அழகே தாய்மைதான். கொஞ்சம் பூசனாப்ல இருந்தாதான் அழகு. அம்மாக்கள், கொடி இடையோடு இருப்பது கூடாதுங்கிறது என் கருத்து. உடல் பருமனோடு இருப்பது அசிங்கம் கிடையாது. அந்தந்த வயசுக்குத் தகுந்த மாதிரி இருக்கிறதுதான் அழகு என்றார்.

தொகுப்பாளினி அர்ச்சனா கூறுகையில், ஆண்கள் வெயிட் போட்டா பெரிதாக பேசுவதில்லை, பெண்கள் வெயிட் போட்டா மட்டும் ஏன் விவாதிக்கிற அளவுக்குப் போகுதுனு குழந்தை பிறப்புக்கு பிறகு வெயிட் போடத்தான் செய்தது. என் குழந்தை இந்த உலகத்தைப் பார்க்க நான் பல தையல்களைப் போட்டுக்க வேண்டியிருந்தது.

என்னைக் குண்டா இருக்காங்கனு சொல்ற எல்லாத்துக்கும் என் தையல்களை காட்டினா ஒத்துப்பாங்களா என்று கூறியுள்ளார்.

கலா மாஸ்டர் கூறுகையில், பிரசவத்துக்குப் பிறகு வெயிட் போடுவது சாதாரணமான விஷயம்தான். இதை நினைச்சு மனதளவுல வருத்தப்படக்கூடாது. எப்போது நம்மை கன்ட்ரோலா வச்சுக்க முடியுமோ அப்போ நம் உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here