பாவனா பிரச்சினையில் இறுதியில் உண்மை வென்றதில் மகிழ்ச்சியாக இருப்பதாக, அவருடைய குடும்பத்தினர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நடிகை பாவனா கடத்தில் வழக்கில் முன்னணி நடிகரான திலீப் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாவனாவின் அண்ணனான ஜெயதேவ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்,

இறைவனுக்கு நன்றி

இந்தப் பிரச்சினையில் இறுதியில் உண்மை வென்றுள்ளதில் மகிழ்ச்சி. ஆரம்பத்திலிருந்தே வழக்கு விசாரணைக்கு ஏற்பட்ட பல்வேறு குறுக்கீடுகளுக்கு இடையேயும் உண்மை வெற்றி பெற இறைவனே துணை நின்றிருக்கிறார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாங்கள் மேல்முறையீடு செய்யாததற்கு கேரள காவல்துறை மீது நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையுமே காரணம்.

எங்களுடன் துணை நின்ற அனைவருக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களுக்காக குரல் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக எந்தவித அழுத்தத்துக்கும் அடிபணியாமல் நடவடிக்கை எடுத்த கேரள போலீஸாருக்கு நன்றி.

உலக முழுவதும் பல்வேறு திக்குகளில் இருந்தும் எங்கள் மீது நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி.

குற்றவாளிகள் அனைவருமே சிறைக்கு அனுப்பப்படும்வரை அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here