நடிகை பாவனா கடத்தல் வழக்கின் பின்னணியில் இருக்கும் சதியினை நீதிமன்றத்தில் கூறுவதற்கு தயாராக உள்ளோம் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்சர் சுனில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 17 ஆம் திகதி நடிகை பாவனா தனது உதவியாளர் பல்சர் சுனில் மற்றும் ஓட்டுநர் மார்ட்டின் ஆகியோரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான பல்சர் சுனில், மார்ட்டின், பிரதீப் ஆகிய 3 பேரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

எனினும் பிரதான அமர்வு நீதிபதிகள் விசாரணையை ஜீன் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையே பாவானாவின் கடத்தல் பின்னணியில் இருக்கும் சதியினை நீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here