நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகை காவ்யா மாதவனும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக முக்கிய ஆதாரங்களை கண்டுபிடித்த பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும், 2வது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாவனா வழக்கில் நடிகையும், திலீப்பின் இரண்டாவது மனைவியுமான காவ்யா மாதவனுக்கு எதிராக இரண்டு வலுவான ஆதாரங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாவனாவை கடத்திய பல்சர் சுனில் காவ்யாவின் கடைக்கு சென்றது பக்கத்து கடையில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்துள்ளது, அந்த வீடியோவை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து காவ்யா மற்றும் அவரது தாயை பொலிசார் இன்று தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here