நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தோல்வியைடைந்ததால் நடிகை படு அப்செட்டில் இருக்கிறாராம். நடிகையை விட நடிகையின் காதலர் விக்னேஷ் சிவன் இன்னும் அப்செட்டில் இருக்கிறார்.

நயன்தாராவுக்கு தனியாக ஒரு மார்க்கெட் உருவான பிறகு பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். இதற்கு கரணம் காதலர் விக்னேஷ் சிவன் தான்.

அதுமட்டுமில்லாது தன்னை அணுகும் ஹீரோக்களையும் அவமானப்படுத்தினார். இதனால் எல்லா ஹீரோக்களுமே நயன்தாரா மேல்செம காண்டில் இருந்தார்கள்.

சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நயன்தாராவின் பேய் படமான டோரா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. எனவே அவமானப்படுத்தப்பட்ட பெரிய ஹீரோக்கள் பார்ட்டி வைத்துக் கொண்டாடுகிறார்களாம்.

படத் தோல்வியால் விக்னேஷ் சிவன் அப்செட் ஆனதற்கு காரணம் எங்கே திரும்ப ஹீரோக்களுடன் ஜோடி போடத்தொடங்கி விடுவாரோ.. நம்ம பேச்சு எடுபடாமல் நம்ம இடம் ஆட்டம் கண்டுவிடுமோ என்பதுதானாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here