நடிகர் போஸ் வெங்கட் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லன் சுமனுக்கு உதவியாளராக வந்து பெயர் வாங்கியவர், இருப்பினும் இவரது பெயர் சொல்லும் அளவுக்கு கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

இயக்குனர் கே வி ஆனந்த் கோ படத்தில் நல்ல வேடம் ஒன்று கொடுத்திருப்பார். தற்போது அதே கே வி ஆனந்த் மீண்டும் கவண் படத்தில் போஸ் வெங்கட்டுக்கு தீரன் என்ற பக்க லோக்கல் அரசியல்வாதி கொடுத்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தை மக்கள் வெகுவாக ரசித்துள்ளனர், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தனது வாழ்க்கையில் தோல்வி வெற்றிகளை பற்றி பகிர்ந்தார்.

குறிப்பாக சினிமா தான் வாழ்கை என்று இருந்த போஸ்க்கு ஒரு கஷ்டமான கட்டடத்தில் மீண்டும் சீரியல் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேக்கப்லாம் போட்டு கொண்டு ரெடியாக இருக்க, நீங்கள் சீரியல் நடிக்க சென்றால் நான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வேன் என மிரட்டி என் மனைவி என்னை சீரியலில் நடிக்கவிடாமல் தடுத்தார்.

என்னை விட என் மேல் அவளுக்கு நம்பிக்கை அதிகம் , அந்த நம்பிக்கையை 9 வருடம் கழித்து இப்போது தான் நடந்துள்ளது என்று உருக்கமாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here