பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் நடிப்பில் ராஜமவுலி இயக்கிய பிரமாண்ட சரித்திர படம் பாகுபலி. இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை அடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் ஆடியோ விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிலையில், நேற்று மாலை சென்னையிலும் நடைபெற்றது. முன்னதாக, நேற்று காலை சென்னையில் பாகுபலி-2 படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது.

அதில், டைரக்டர் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர். படத்தைப்பற்றி அதன் பிரமாண்டத்தைப்பற்றி பலரும் பெருமையாக பேசினர். பின்னர் பத்திரிகையாளர்கள் பாகுபலி-2 குறித்த கேள்விகள் எழுப்பினர். அப்போது, பாகுபலி படம் தமிழில் எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக பாகுபலி படத்தின் ஆடியோ விழாவின்போது சொன்னீர்களே? என்று நிருபர்கள் கேட்டனர்.

ஆனால் அதை பகீரங்கமாக மறுத்தார் ராஜமவுலி. பாகுபலி கதை அடிமைப் பெண் படத்தின் கதையை தழுவப்பட்டதல்ல. அப்படி தழுவி எடுத்ததாக நான் சொன்னதும் இல்லை. வேண்டுமானால் முந்தைய சரித்திர படங்களின் தாக்கம் இந்த படத்தில் இருக்கலாம். மற்றபடி பாகுபலி படத்தின் கதை எந்த படத்தை யும் தழுவி உருவாக்கப்படவில்லை என்று உறுதியாக மறுத்தார் ராஜமவுலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here