‘பெப்சி’ உமாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. முதல் நட்சத்திர தொகுப்பாளினி அவர்தான். அவர் நடத்தியது ஒரு டெலிபோன் நிகழ்ச்சிதான். ஆனால் அவர் உடுத்தி வரும் பட்டுப்புடவைக்காக பெண்களும், அவரது சிரிப்புக்காக ஆண்களும் காத்துக் கிடந்தார்கள். பல வருடங்கள் ஒளிபரப்பானது அந்த நிகழ்ச்சி. பின்னர் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

தற்போது பெப்சி உமா ஏற்றுமதி இறக்குமதி, மற்றும் கட்டிடத்துறை தொடர்பான ஒரு சர்வதேச நிறுவனத்தின் தமிழ்நாட்டு பிரிவுக்கு அதிகாரியாக இருக்கிறார். பல சேனல்கள் அவரை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைத்தபோது மறுத்துவிட்டார். சும்மா அரட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் தோன்ற விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

ஆனாலும் தனக்கு புகழ்தேடிக்கொடுத்த சின்னத்திரையை மறந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். புதிய கான்செப்ட்டோடு நல்ல நிகழ்ச்சி அமைந்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஐடியாக இருக்கிறதாம் பெப்சி உமாவுக்கு.

தற்போது, தனது குடும்பம் தனது வேலை என்று ஒரு நல்ல குடும்ப தலைவியாக தனது கடமைகளை செய்து வருகிறார் நம்ம பெப்சி உமா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here