போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நடிகர், நடிகைகள் உட்பட 12 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

தெலுங்கு திரைப்பட உலகில் போதைப் பொருட்கள் புழக்கம் கணிசமாக இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

நடிகர், நடிகைகள் சிகரெட், ஊசி, சுவாசித்தல் போன்றவற்றின் மூலமாக கொக்கைன் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

நவ்தீப், சார்மி, முமைத்கான், தருண், தனிஷ், நந்து போன்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும், இயக்குனர் பூரி ஜெகன்நாத் உட்பட 12 திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெலுங்கு சேனல்கள் செய்திகள் வெளியிட்டன.

ஆனால் இவர்கள் பெயரை பொலிசார் வெளியிடவில்லை.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின் என்ற போதைப் பொருள் கடத்தல்காரரை பொலிசார் கைது செய்து விசாரித்தனர்.

அவர் ஐதராபாத்துக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர்–நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து 12 பேரும் 19ம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

பொலிஸ் விசாரணைக்கு பிறகே அவர்கள் கைது செய்யப்படுவார்களா என்பது தெரியவரும்.

இதனிடையில் தனக்கு போதைப் பழக்கம் கிடையாது எனவும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பும் இல்லை எனவும் நடிகர் நவ்தீப் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here