ரகுல் ப்ரீத் சிங்கி லிப் டூ லிப் காட்சியில் நடிக்க தயாராக இருந்தாலும் ஹீரோக்கள் தயாராக இல்லையாம்.தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அண்மையில் வெளியான படத்தில் அவர் பாவாடை தாவணியில் நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் தன்னை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்ப்பதாக கூறுகிறார் ரகுல்.கதைக்கு தேவைப்பட்டால் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க தயங்க மாட்டேன். ஆனால் அதுவே விளம்பரத்திற்காக திணிக்கப்பட்ட காட்சியாக இருந்தால் நிச்சயம் நடிக்க மாட்டேன் என்று ரகுல் தெரிவித்தார்.

லிப் டூ லிப் காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் தயாராக உள்ளார் என்ற செய்தியை கேட்டு எந்த ஹீரோவும் குஷியாகவில்லையாம் மாறாக பயப்படுகிறார்களாம்.முன்னதாக ரகுல் ப்ரீத் சிங் லிப் டூ லிப் காட்சியில் நடித்த படங்கள் ஓடவில்லை. இதை மனதில் வைத்து தான் ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.

கதைப்படி லிப் டூ லிப் காட்சி என்று கூறினால் கண்டிப்பாக வேண்டுமா, மாத்திக்கலாமே என்று ஹீரோக்கள் இயக்குனர்களிடம் கேட்கிறார்களாம். இதனால் ரகுல் ப்ரீத் சிங் மீது கடுப்பில் இருக்கும் நடிகைகள் சிரிக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here