அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் திரைப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்கும் நடிகர் விவேக் ஒபராய் படம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.

சற்று முன் அவர் வெளியிட்டுள்ள  தகவல் என்னவென்றால், அனைத்து தல ரசிகர்களுக்கும் பெரிய வணக்கம், இப்போது பெல்க்ரேட் விமான படை தளத்தில் உள்ளோம். இங்கே உறை பனி வீசுகிறது. ஆகவே, எங்களுக்கு உங்களின் அன்புக்கதிர்களை அனுப்புங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் விவேக் ஒபராய்.

படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தின் மத்தியில் நிறைவுபெரும் மற்றும் தயாரிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. தல ரசிகர்கள் மே 1-ம் தேதி அவரது பிறந்தநாளை கொண்டாடவும், விவேகம் டீசரை வரவேற்கவும் தயாராகிவிட்டனர்.

இந்நிலையில், விவேக் ஓபராயின் கருத்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here