தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய ஸ்வாதி கொலையை மையமாக கொண்டு “ஸ்வாதி கொலை வழக்கு” என்ற பெயரில் ரமேஷ் செல்வன் என்பவர் படம் இயக்கிவருகிறார்.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து வைரலானது. அதை இதுவரை 9.4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

படத்தை இயக்க ஸ்வாதியின் தந்தையிடம் அனுமதி வாங்காதது, வழக்கு நிலுவையில் உள்ள போது படம் எடுத்தது மற்றும் படத்தின் டிரைலர் வெளியிட திரைப்பட தணிக்கை துறையிடம் சான்றிதழ் பெறப்படவில்லை உள்ளிட்ட 3 காரணங்களால் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here