புதிய உயர் செயல்திறன் ராக்கெட் இயந்திரத்தை வட கொரியா இராணுவம் சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளன.

வட கொரியா உலகத் தரத்தில் செயற்கைக்கோளை ஏவும் திறன் அடைய இந்த இயந்திரம் உதவும்.

நாட்டின் புதிய ராக்கெட் தொழில்துறையின் ”புதிய பிறப்பு” என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

புதிய ராக்கெட் சோதனையை கண்டுகளித்த கிம், நாம் இன்று அடைந்த, புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் வெற்றியின் முக்கியத்துவத்தை இந்த உலகம் வெகுவிரைவில் அறியும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில், அணு ஆயுதம் தொடர்பான பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப நிர்வாகம் இந்த பிரச்சினையை அதன் முன்னுரிமையான பிரச்சினையாக மாற்றியுள்ளது.

சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் சூழலில் வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை அதிகரித்துள்ளது.

சர்வதேச அணு ஆயுதமயமாக்கலை நோக்கமாக கொண்டு வடகொரிய இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.

வடகொரியா இந்த விடயத்தில் தனது இலங்கை அடைவது தவிர்க்க முடியாதது என கடந்த மாதம் அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், வட கொரியா நேற்று பரிசோதித்துள்ள ஏவுகணையானது அமெரிக்காவை அடையக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களிடம் மறைமுகமாக கூறியுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் வடகொரியாவின் இராணுவ செயற்பாடுகள் மிக இரகசியமானவை என்பதால், அந்த நாட்டின் அணு ஆயுத பலத்தை மதிப்பீடு செய்வது வல்லுநர்களுக்கும் கடினமாக கரியம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிராந்தியத்தில் பதற்றமான நிலைமை குறைக்க வடகொரியாகவுக்கு ராஜதந்திர அழுத்தங்களை கொடுக்குமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கடந்த புதன் கிழமை சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here