இலங்கையில் பொலனறுவை – மெதிரிகிரிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஒரு பாடசாலையில் 41 மாணவ, மாணவிகள் தமது கைகளை வெட்டிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸார் பொறுப்பேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

போதைப்பொருள் ஒன்றை பயன்படுத்திய மாணவர்கள் அதன் தாக்கத்தால், தமது கைகளில் பிளேட்டால் வெட்டிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

10ம் மற்றும் 11ம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் மாணவிகள். பாடசாலையின் உப அதிபர் மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவர்களை பரிசோதித்த போது கைகளில் வெட்டுக்காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மாணவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த போதைப்பொருள் எப்படி பாடசாலைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here