நேபாளத்தில் இளம்பெண் ஒருவர் மாதவிடாய் காலத்தில் தனியாக தங்கவைக்கப்பட்ட நிலையில் விஷ நாகம் தீண்டி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் அங்குள்ள இந்து மத ஆச்சாரப்படி இளம்பெண்களை அவர்களின் மாதவிடாய் காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்துள்ள சிறு குடிசைகளில் தங்க வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தைலேக் மாவட்டத்தில் உள்ள 18 வயது இளம்பெண் ஒருவர் இவ்வாறு தனியாக தங்கவைக்கப்பட்ட நிலையில் விஷ நாகம் தீண்டி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அவரது உறவினர்கள், தேவையற்ற மத ஆச்சாரங்களால் தாம் தமது உறவினர் உயிரிழந்ததாகவும், போதிய சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இச்சம்பவமானது நேபாளத்தில் முதன் முறை அல்ல எனவும், அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் இதுபோன்ற மத அடிப்படையிலான ஆச்சாரங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியாக தங்கவைப்பதை அங்குள்ள உச்ச நீதிமன்றம் கடந்த 2005 ஆம் ஆண்டு தடை செய்திருந்த போதும் தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here