தன்னை பற்றி அசிங்கமாக ட்விட்டரில் கமெண்ட் போட்டவருக்கு நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். தான் சமைப்பது, வீட்டில் செடி வளர்ப்பது முதல் குடும்பத்துடன் வெளிநாடு செல்வது வரை பல விஷயங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்வார்.

மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார். தமிழக காங்கிரஸில் சத்யமூர்த்தி, ராஜாஜி, காமராஜ், கக்கன் போன்ற தலைவர்கள் இருந்தனர். ஆனால் இன்று குஷ்பு போன்ற தலைவர்கள் பிரதமரை ஒருமையில் பேசுகிறார்கள். என்ன ஒரு வெட்கக்கேடு என்று வைத்யா என்பவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

வைத்யாவின் ட்வீட்டை பார்த்த பாலாஜி பாண்டுரங்கன் என்பவர், சுந்தர் விற்பனை செய்யும் தயாரிப்பு குஷ்பு என்று தரக்குறைவாக கமெண்ட் போட்டார். குஷ்பு வழக்கமாக தன்னை தரக்குறைவாக பேசுவபவர்களை கண்டுகொள்ள மாட்டார். ஆனால் பாலாஜியின் ட்வீட்டை பார்த்த அவர் கோபம் அடைந்து பதிலடி கொடுத்துள்ளார்.

உங்க அம்மாவை உங்க அப்பா விற்றது மாதிரியா அல்லது உங்க வீட்டுப் பெண்களை நீ விற்பது மாதிரியா? என்று பாலாஜிக்கு பதிலடி கொடுத்து ட்வீட்டியுள்ளார் குஷ்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here