உயிரிழந்த தாயின் கருவறையில் 123 நாட்கள் உயிரோடு இருந்த இரட்டைக் குழந்தைகள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேசிலைச் சேர்ந்த படிஹா(21) என்னும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ள நிலையில், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏதும் ஏற்படலாம் என்று உணர்ந்த குறித்த பெண்ணின் கணவர், மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

எனினும் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், திடீரென உயிரிழந்த பெண்ணை ஸ்கான் செய்து பார்த்த பொழுது இரட்டைக் குழந்தைகள் கர்ப்பப்பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு அக்குழந்தைகளின் இருதயம் துடிப்பதையும் மருத்துவர்கள் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில், அக்குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு சில காலம் எடுக்கும் எனத் தெரிவித்த மருத்துவர்கள், 123 நாட்களாக மருத்துவமனையில் வைத்திருந்து பின்னர் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே எடுத்துள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள குழந்தைகளின் தந்தை, எனது குழந்தைகளுக்கு ஆன்னா விக்டோரியா, அசப் என்று பெயர் வைத்துள்ளேன்.

மருத்துவமனை செல்லும் வழியில் என்னுடைய மனைவி நான் வீட்டுக்கு திரும்பி வர மாட்டேன். அங்கேயே இருந்து விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளாள் என்று கவலையோடு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here