எலிசபெத் மகாராணி மற்றும் அவர் கணவர் பிலிப் பயன்படுத்திய கார் வரும் 26ஆம் திகதி ஏலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் Daimler நிறுவனத்தின் 4.0 LWB ரக சொகுசு கார் ஒன்றை கடந்த 2001 ஜூன் மாதத்திலிருந்து 2007 ஜனவரி மாதம் வரை பயன்படுத்தினார்.

பச்சை நிறத்திலான இந்த காரில் பல்வேறு விதமான வசதிகள் உள்ளன. அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் கார் பயணிக்கும்.

Y694 CDU என்ற எண் கொண்ட Daimler காரை எலிசபெத் மகாராணியும், பிலிப்பும் அவர்களே பல தடவை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஓட்டி சென்றுள்ளார்கள்.

5 பேர் உட்காரக்கூடிய இந்த கார் 2007ம் ஆண்டுக்கு பின்னர் பயன்படுத்தப்படாமலே இருந்தது.

இந்நிலையில் இம்பீரியல் போர் மியூசியத்தில் வரும் 26ஆம் திகதி நடைபெறும் ஏலத்தில் கார் விற்பனைக்கு வருகிறது.

£45,000லிருந்து £55,000க்குள் ஏலத்தில் கார் விற்பனைக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here