ஐ.நா வடகொரியா மீது தடைகளை கொண்டுவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

வடகொரியாவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று உலகநாடுகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஆனால் வடகொரியாவோ தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து வடகொரிய வெளியுறவு துறை அமைச்சர் கூறுகையில், அமெரிக்காவின் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா செய்து வருவதாகவும், தங்கள் நாட்டை பாதுகாத்து கொள்வது தங்களின் உரிமை என்று கூறியுள்ளார்.

மேலும் ஐ.நா வடகொரியா மீது தடைகளை கொண்டுவந்தால் தக்க எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here