ராஜஸ்தானை சேர்ந்த பத்ரிலால் என்பவரது கழுத்தில் இருந்து 90 குண்டூசிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் அதிகமான குண்டூசிகளை விழுங்கியுள்ளார். இதனால் கழுத்தில் வலி மற்றும் உணவு சாப்பிட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

டில்லியில் உள்ள ஆந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் அவரை சி.டி.ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உடலின் உள்ளே பல்வேறு இடங்களில், 150 குண்டூசிகள் இருந்தது தெரிய வந்தது.

குறிப்பாக, கழுத்து பகுதியில் மட்டும், 90 குண்டூசிகள் இருந்தன. சுமார் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கழுத்து பகுதி வழியாக தான் மூளைக்கு ரத்தம் மற்றும் பிராண வாயு கொண்டு செல்லப்படுகின்றன.

சிறிய தவறு நிகழ்ந்தால் கூட அவர் கோமாவில் விழுந்து விடும் அபாயம் இருந்தது.

இருப்பினும் மிகவும் சிரமப்பட்டு அவரது கழுத்து பகுதியில் இருந்த, 90 குண்டூசிகள் அகற்றப்பட்டன என்று கூறியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பத்ரிலால் நலமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here