அமெரிக்காவில் சாதனை முயற்சியின் போது காதலனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலியை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தை சேர்ந்தவர் பெட்ரோ ரூயிஸ் (22), இவர் காதலி மோனாலிசா பெரெஸ் (19).

சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்களை வரவழைப்பதற்காக அடிக்கடி இந்த காதல் ஜோடி ஏதாவது சாகசத்தில் ஈடுபடுவது வழக்கமாகும்.

அதன்படி, ரூயிஸ் நெஞ்சில் புத்தகத்தை பிடித்திருக்கும் நிலையில் அதை நோக்கி மோனாலிசா துப்பாக்கியால் சுட்டு அதை வீடியோ எடுக்க இருவரும் முடிவு செய்தார்கள்.

இதுகுறித்து மோனலிசா தனது டுவிட்டர் பக்கத்தில், நானும், பெட்ரோவும் ஒரு ஆபத்தான வீடியோவை பதிவு செய்ய போகிறோம். இது பெட்ரோவின் யோசனை தான் எனவும் தன்னுடையது அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், இது குறித்து யூடியூப்பிலும் தங்களது நட்பு வட்டாரத்திலும் இருவரும் தகவல் வெளியிட்டனர்.

அதன் பிறகு இணையத்தின் நேரடி ஒளிபரப்பில், ரூயிஸ் நெஞ்சில் புத்தகத்தை பிடித்திருந்த நிலையில், மோனாலிசா அதனை நோக்கி சுட்டார்.

Me and Pedro are probably going to shoot one of the most dangerous videos ever😳😳 HIS idea not MINE🙈

கண் இமைக்கும் நேரத்தில் புத்தகத்திற்குள் ஊடுருவிச் சென்ற துப்பாக்கித் தோட்டா ரூயிஸின் நெஞ்சில் பாய்ந்தது.

இதில், ரூயிஸ் சம்பவ இடத்திலேயே பலியாக இந்த சம்பவத்தை இணையத்தில் பார்த்த ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் மோனாலிசாவை கைது செய்த பொலிசார் திட்டமிடாத கொலை என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here