சூதாட்டத்தில் மனைவியை வைத்து சூதாடிய கணவர் தோற்றுப்போன காரணத்தால், சூதாட்டத்தில் வெற்றி பெற்ற இருவர் மனைவியை கற்பழித்துள்ளனர்.

மத்தியபிரதேசத்தின் இந்தூரில் கணவர் ஒருவர் சூதாட்டத்தில் தனது மனைவியை வைத்து விளையாடியுள்ளார்.

இதில், இவர் தோற்றுப்போகவே இவரது மனைவியை வெற்றி பெற்றவர்கள் கற்பழித்துள்ளார்கள்.

இந்நிலையில் பொலிசார் நடத்திய பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில், அப்பெண் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.

அதில் சில நாட்களுக்கு முன் எனது கணவர் என்னை வைத்து 2 பேருடன் சூதாடியுள்ளார்.

அதன்பின் அவர்களிடம் எனது கணவர் தோல்வி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து என்னை 2 பேரும் கற்பழித்தனர்.

உனது கணவரிடம் இருந்து உன்னை வெற்றி பெற்றுள்ளோம் என அவர்கள் என்னிடம் கூறினர் என தெரிவித்துள்ளார்.

இதனால் எனது கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தேன். ஆனால் அந்நபர்கள் என்னை தொடர்ச்சியாக கற்பழித்தனர் என கூறியுள்ளார்.

பெண்ணின் புகாருக்கு பதில் அளிக்கும்படி தொடர்புடைய நபர்களுக்கு பொலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here