எகிப்தில் சுற்றுலா சென்ற இரண்டு ஜேர்மன் பெண்களை கத்தியால் குத்திக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

எகிப்தின் பிரபலமான ஹுர்காடாவின் Red Sea ரிசார்ட்டில் கத்தியுடன் நுழைந்த 20 வயதுடைய மர்ம நபர், இரண்டு ஜேர்மன் பெண்களை கத்தியால் குத்தியதில் சம்பவயிடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் நான்கு வெளிநாட்டினரை குத்தி காயப்படுத்திவிட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பித்துள்ளான்.

காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் ஐரோப்பியாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தாக்குதல்தாரி பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், “விலகிச் செல்லுங்கள், எகிப்தியர்கள் வேண்டாம்” என கூச்சலிட்டதாகவும் சம்பவயிடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ரிசார்ட் ஊழியர்கள் அவனை தடுக்க முயன்றதால் பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தகவலறிந்தவுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர். தற்போது, அவனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here