புற்றுநோய் பாதிப்பால் தந்தையின் தோளில் சாய்ந்தபடி உயிரிழந்த சிறுவனின் புகைப்படங்களை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் கிரேட் மான்செஸ்டரை சேர்ந்தவர் Wayne Prescott (38), இவர் மனைவி Steph (26). இவர்களின் மகன் Braiden Prescott (7).

Braidenனுக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே Neuroblastoma என்ற புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்ட போதும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி Braiden உயிரிழந்துள்ளான்.

அவன் உயிரிழந்த தருணம் மிக உருக்கமான நிமிடங்களாக அமைந்தது. அதாவது, வீட்டில் Braiden தூங்கி கொண்டிருந்த போது திடீரென வலியால் முனங்கியுள்ளான்.

சத்தம் கேட்டு அவன் பெற்றோர் அருகில் வந்துள்ளனர். அப்போது Braidenன் தந்தை Wayne, மகனை தனது தோளில் சாய்ந்து படுக்க வைத்துள்ளார்.

அப்போது திடீரென தன்னை புகைப்படம் எடுக்குமாறு Braidenன் கத்தியுள்ளான். இதையடுத்து, Braidenஐ அவன் தாய் Steph புகைப்படம் எடுத்த சில வினாடிகளில் தந்தையின் தோளிலேயே Braidenன் உயிர் பிரிந்துள்ளது.

இந்நிலையில், இது சம்மந்தமான புகைப்படங்களை மற்றவர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் Braidenன் பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து Steph கூறுகையில், நோய் பாதிப்பால் Braiden இறப்பதற்கு சில நாட்கள் முன்னால் வரை அவனால் பேச முடியவில்லை.

ஆனால், அவன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தன்னை புகைப்படம் எடுக்கும்படி சத்தமாக கத்தியது தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும், இறந்த பிறகு Braidenன் சடலம் வீட்டில் வைக்கபட்டதாகவும், அதற்கு காரணம் Braidenன் சகோதரர்கள் அவனுடன் கடைசியாக இருக்க வேண்டும் என்பது தான் எனவும் Steph கூறியுள்ளார்.

Braidenனுக்கு புற்றுநோயின் தாக்கம் உள்ளதாக மருத்துவர்கள் கூறிய போது கணவரும், தானும் உணர்ச்சியற்ற மன நிலைக்கு போனதாக சோகமாக தெரிவித்துள்ளார்.

Braidenன் நினைவு தங்களுக்கு எப்போதும் இருக்க, தினமும் அவனை பற்றி பேசி வருவதாக கூறியுள்ள Steph, தற்போது 18 வாரம் கர்ப்பமாக உள்ளார்.

மேலும், Braiden தனக்கு தங்கை வேண்டும் என முன்னர் ஆசைப்பட்டதாகவும், பிறக்க போகும் பெண் குழந்தை அவன் கொடுக்க போகும் பரிசு என தான் நம்புவதாகவும் உணர்ச்சி பொங்க Steph கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here