கனடாவில் தனது 6 குழந்தைகளின் சடலத்தை மறைத்து வைத்திருந்த தாய்க்கு நீதிமன்றம் 8½ ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கனடாவின் மணிடோபா மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா கீஸ்பிரேசட் (43).

ஆண்ட்ரியா தனது 6 ஆறு குழந்தைகளின் சடலங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாக கடந்த 2014ல் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆண்ட்ரியா தனது குழந்தையின் சடலத்தை தனியார் நிறுவனத்தின் லாக்கரில் மறைத்து வைத்திருந்தார்.

நிறுவனத்துக்கு பணம் செலுத்தாததால் அவர் லாக்கரை ஊழியர்கள் திறந்து பார்த்த போது குழந்தையின் அழுகிய சடலம் இருந்துள்ளது.

மேலும் 5 குழந்தைகளின் உடல் அங்கு அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தைகளின் வயது 8-9 மாதங்கள் வரை இருக்கும்.

இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியாவுக்கு 8½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி தாம்சன் கூறுகையில், ஆண்ட்ரியா தனக்கு பிறந்த குழந்தைகள் குறித்து கணவரிடம் மறைத்துள்ளார். பிறக்கும் போது குழந்தைகள் உயிருடன் பிறந்தாலும், சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்திருக்கலாம்.

அதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here