பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பரமான ஆண்டலியா என்ற பிரம்மாண்ட பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரிலையன்ஸ் நிறுனத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஆண்டலியா என்ற ஆடம்பர பங்களா ஒன்று தெற்கு மும்பையில் உள்ள அல்டமொன்ட் பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு தான் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த பங்களாவின் 9வது தளத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இந்த விபத்தினால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

தீயானது பங்களாவில் உள்ள 4ஜி ஆண்டனா டவரிலிருந்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here