பாகிஸ்தான் குறித்து தரக்குறைவாக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மைனாரிட்டி சியா பிரிவை சேர்ந்தவர் தமூர் ரஸா(30). இவர் பேஸ்புக்கில் பாகிஸ்தான் குறித்து தரக்குறைவாக பதிவேற்றம் செய்துள்ளார்.

தமூர் ரஸா-வுடன் பணி புரியும் சக ஊழியர் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பொலிசார் இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. சைபர் க்ரைம் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சைபர் க்ரைம் சட்டத்தின் கீழ், ரஸாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here